யாழ் மாநகரசபை அதிரடி திட்டம்: மாநகர காவல் படை உருவாகியது!

Date:

யாழ்.மாநகர காவல் படை முதல் தடவையாக இன்று காலை தமது பணியை ஆரம்பித்துள்ளது.

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல் மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பது, தண்டப்பணத்தை அறவிடுவதற்காக குறித்த மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநகர பாதுகாப்பு படை நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்ட நிலையில் விபத்துக்களை தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளை குறித்த மாநகர பாதுகாப்பு படை கண்காணித்தது.

யாழ் மாநகர சுகாதார பணிமனைகளில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் 5 பேரை, புதிய சீருடையொன்றை அறிமுகம் செய்து, மாநகர காவல் படையென்ற பெயரில் யாழ் மாநகரசபை உருவாக்கியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...

காணாமல் போன மருத்துவரின் உடல் மீட்பு

காணாமல் போயிருந்த பதுளை போதனா மருத்துவமனையின் மயக்கவியல் நிபுணர் மருத்துவர் பிரபாத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்