மோதல் காலத்தில் இராயப்பு யோசெப் ஆண்டகையின் பணி அளப்பரியது!

Date:

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் மறைந்த ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை நெருங்கிய வகையில் தொடர்புபட்டு ஆற்றிய அளப்பரிய பணிகளை தனிப்பட்ட முறையில் நான் நன்கறிவேன் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப் ஆண்டகையின் மறைவையடுத்து, அதிவணக்கத்துக்குரிய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப் ஆண்டகையின் இறைபதமடைந்த செய்தியைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைகின்றேன்.

இத்துயர செய்தியை கேள்வியுற்ற நான் எனது ஆழ்ந்த அனுதாபங்களை மன்னார் மறைமாவட்டத்தின் குருக்கள், துறவியர், பொதுநிலையினர், ஆண்டகையின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் ஆண்டகை நெருங்கிய வகையில் தொடர்புபட்டு ஆற்றிய அளப்பரிய பணிகளை தனிப்பட்ட முறையில் நான் நன்கறிவேன்.

எமது இலங்கைத்திரு நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பவும் மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்தெடுக்கவும் பெரும் பங்களிப்பினை ஆயர் இராயப்பு யோசேப் நல்கியுள்ளார்.

மேலும் அவர் பேர்ச்சுவார்த்தைகளின் வழியாக நிலையான அமைதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

எனினும் எதிர்பாராதவிதமாக மக்கள் பிரதிநிதிகளுக்கிடையே மேற்படி கருத்தாடல்கள் முழுமையான வெற்றியை அளிக்கவில்லை.

எவ்வாறெனினும் அவரது இடைவிடாத முயற்சியும் அமைதிக்கான வழிகாட்டுதலும் பல்லின பல்சமய பண்பாட்டுமயமாக்கல் நல்லுறவுக்கும் ஆற்றிய பணியை நான் நினைவு கூறுகின்றேன்.

இறைவன் அவர் ஆன்மாவுக்கு நித்திய இளைபாற்றியை அருள்வாராக என குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்