மன்னாரில் தேங்காய் எண்ணெய் மாதிரிகள் சேகரிப்பு!

Date:

நடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் தேங்காய் எண்ணை கலப்படம் தொடர்பான பிர்ச்சினைகளை குறைக்கும் வகையில், மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையில் உள்ள தேங்காய் எண்ணைகளின் மாதிரிகளை பெற்று கொள்ளும் செயற்திட்டம் மத்திய பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில் இன்று திங்கட் கிழமை காலை 10 மணியளவில் இடம் பெற்றது.

மாவட்ட ரீதியாக உள்ள மொத்த மற்றும் பிரதான விற்பனை நிலையங்களில் மேற்படி மதிரிகள் சேகரிக்கப்பட்டு இன்றைய தினம் தேசிய பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளது.

மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் ஒழுங்கமைப்பில் கலப்படம் மற்றும் அங்கிகரிக்கப்படாத எண்ணைகள் தொடர்பாக ஆரயப்பட்டதுடன் சந்தேகத்துக்குறிய எண்ணைகளின் மாதிரிகளும் பெறப்பட்டுள்ளது.

மேற்படி பெறப்பட்ட மாதிரிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தேசிய பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

அத்துடன் தேசிய பகுப்பாய்வு திணைக்களத்தினூடாக மாதிரிகளில் கலப்படம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் விற்பனையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்