மியான்மர் ஜனநாயக போராட்டங்களில் இதுவரை 320 பேர் பலி!

Date:

மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போரட்டத்தை ஒடுக்க இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 320- ஆக உயர்ந்துள்ளது.

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.

இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.‌ நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ‌இந்த போராட்டத்தை இராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ஆனாலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில், ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான போரட்டத்தை ஒடுக்க இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர்...

இடம்மாறி படுத்த முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!

அஹுங்கல்லவின் கல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 74 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்