பப்ளி நாயகி பட்டினி கிடந்து வெளியிட்ட புதிய தோற்றம்!

Date:

தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே.

தெலுங்கில் இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய பட்டாலும், ஷாலினி பாண்டே அளவிற்கு யாரும் அந்த கதாபாத்திரத்தில் நிற்கவில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து.

ஷாலினி பாண்டேயின் தோற்றம் மனதில் நின்றமைக்கு, சிரித்தால் கன்னத்தில் குழி விழும் முக தோற்றம், கொழுக் மொழுக் என்ற உடல் தோற்றம் போன்ற அடையாளங்கள்தான்.

அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர்-திலகம்’, ஜிவி பிரகாஷ் உடன் ‘100% காதல்’ போன்ற படங்களில் ஷாலினி பாண்டே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் ஜீவாவுடன் நடித்த கொரில்லா படத்தின் மூலம்தான் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனார்.

என்னதான் அம்மணி தெலுங்கு, தமிழ், தற்போது ஹிந்தி என மாறி மாறி நடித்தாலும், தற்போது வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க தவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஷாலினி பாண்டே தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடல் எடையை குறைத்து வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீ போல் பரவி வருகின்றன.

பப்ளி லுக்கில் பல இளைஞர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட ஷாலினி பாண்டே, தற்போது உடல் எடையை பெருமளவு குறைத்து உள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி பாண்டே பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீ போல் பரவுவதோடு ரசிகர்களின் கலவையான விமர்சனங்களையும், ஏகப்பட்டடிலைக்குகளையும் பெற்று வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்