வடமராட்சி கிழக்கில் இளைஞன் மீது புலனாய்வாளர்கள் தாக்குதல்!

Date:

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் ஒருவர் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

கடந்த 20ஆம் திகதி பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை மறித்த புலனாய்வாளர்கள் எங்கே சென்று வருகிறாய் என கேட்டுள்ளனர்,

“இது வீதி. இதனால் போய்வர முடியாதா?“ என இளைஞன் கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இளைஞனை விசாரிக்க வேண்டும் என அழைத்துச் சென்று வெற்றிலைக்கேணி சுடலை பகுதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். தனது மகனை புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றதை கேள்வியுற்ற தாயார் சுடலை பகுதிக்கு ஓடோடி சென்றுள்ளார்.

அங்கு சென்ற தாயை கண்டதும் மகன் விம்மி விம்மி அழுதுள்ளார். ஏன் எனது மகனை அடித்தீர்கள் என புலனாய்வாளர்களை கேட்டதற்கு, தாங்கள் அடிக்கவில்லை என கூறியுள்ளனர்.

மகனை அழைத்துச் சென்ற தாயார் அவரை யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார்.

அவர் தற்போது யாழ் போதனா மருத்துவமனை 24 ம் விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்