அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு

Date:

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று முன்தினம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மிசவுரி மாநிலத்தில் உள்ள அமெரிக்கன் லெஜியன் கிளப்பில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் கேப் கிரார்டியுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் அங்கு பதற்றம் உருவானது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

**ஆஸ்திரேலியாவில் முதல் H5N1 பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி; வைரஸை கட்டுப்படுத்த அரசு உறுதி**

ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆந்தனி அல்பனீஸ் சனிக்கிழமை தெரிவித்ததாவது, நாட்டில் H5N1 பறவைக்காய்ச்சல்...

பாலியல் துஷ்பிரயோகத்தை மறைத்த அதிபர், துணை அதிபர் கைது

  அம்பலாந்தோட்டை தேராப்புத்த தேசிய பாடசாலையின் விளையாட்டு விழா கடந்த மே 21ஆம்...

யாழில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற முயன்ற இளைஞன் பலி

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, பாரதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்