காதலர்தினத்தில் வைரலான நயன்தாரா- விக்னேஷ் புகைப்படம்

Date:

நடிகை நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் 5 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.

வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவது, கோவில்களில் சாமி கும்பிடுவது போன்ற புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தியும் வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசிப்பதாகவும் கிசுகிசுக்கள் வருகின்றன. காதல், திருமணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் தொடர்ந்து ஜோடியாக சுற்றி வருகிறார்கள். நயன்தாரா கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு இன்னும் சில மாதங்களில் விக்‌னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா பட்டு சேலையிலும் விக்னேஷ் சிவன் பட்டு சட்டை அணிந்தும் நேற்று காதலர் தினத்தை கொண்டாடினர். அந்த புகைப்படத்தை விக்‌னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தங்கமே எப்போதும் உன்னை காதலிப்பேன். காதலர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் கையை நயன்தாரா பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஐஸ் சர்ச்சை: தெரணியகலவில் நடந்தது என்ன?

அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று...

அம்பாறை பிசியோதெரப்பிஸ்ட் மரணம் I நான் அவனில்லை பாணியில் பல பெண்களை ஏமாற்றிய பலே கில்லாடி; 3 குழந்தைகள்… வழுக்கைத் தலைக்கு ‘விக்’!

தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகே காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை...

குழந்தையை காருக்குள் விட்டுவிட்டு மறந்துபோய் வேலைக்கு சென்ற தமிழ்ப்பெண்; குழந்தை பலி: ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!

ஜேர்மனியின் ஷோர்ன்டார்ஃபில் (ரெம்ஸ்-மர் மாவட்டம்) புதன்கிழமை அன்று ஒரு காரில் சடலமாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்