24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’: நாமல் விளக்கம்!

பலருக்கு சிபாரிசு கடிதங்களை வழங்கியுள்ளதாகவும், சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்ட கடிதம் அவ்வாறான ஒன்றே என்றும் என ‘அரசியலில் இதெல்லாம் சகஜப்பா’ பாணியில் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச.

ராஜபக்‌ஷக்கள் ஆட்சியில் பல துறைகளில் திறமையானவர்கள், தகுதியுடையோரை தவிர்த்து தனிப்பட்ட செல்வாக்குள்ளவர்களே உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் நீடித்து வரும் நிலையில், நாமல் ராஜபக்‌ஷவின் சிபாரிசு கடிதமொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.

சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அகமதுவுக்கு, நாமல்ராஜபக்ச வழங்கிய பரிந்துரை கடிதத்தின் நகல் வெளியாகி, சமூக ஊடகங்களில் கடுமையான ஆட்சேபணைகள் எழுந்தன.

புவி சரியதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் துணை நிறுவனமான ஜிஎஸ்எம்பி டெக்னிக்கல் சேர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக எம்.எச்.டி.பி கருணாரத்ன மற்றும் இஷார ஹேமந்த ஆகியோரின் பெயர்களை நாமல் ராஜபக்ச முன்மொழிந்துள்ளார்.

இருவரில் இஷார ஹேமந்த பிரதேச சபை உறுப்பினராகவும் டி.வி.சானக்கவின் பிரத்தியேக செயலாளராகவும் இருந்துள்ளார்.

தங்காலையைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பது குறித்து பரிசீலிக்குமாறு நாமல் அமைச்சரிடம் கோரியதாக அந்தக் கடிதம் மேற்கோளிட்டுள்ளது.

நாமலால் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவருக்கே அந்த பதவி வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம், மக்களின் நலனின் அடிப்படையிலான அரசியல் முடிவுகள் பற்றி நீட்டி முழக்கி பேசும் நசீர் அகமட்டின் நடவடிக்கைகள் குறித்தும் பலத்த கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், அமைச்சர் நசீரில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நாமல் மறுத்துள்ளார்.

தாம் ஒரு பரிந்துரையை மாத்திரமே முன்வைத்துள்ளதாகவும், கடந்த காலங்களிலும் இது போன்ற பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் முன்னாள்  அமைச்சர் நாமல் தெரிவித்துள்ளார்.

“இறுதி முடிவு அமைச்சரின் கையில் உள்ளது, நான் அல்ல” என்று  கூறினார்.

பொதுமக்கள் சந்திப்பின் போது பலர் தன்னிடம் சிபாரிசு கடிதங்களை பெறுவதாகவும், மற்ற எம்.பி.க்களுக்கும் இது போன்ற கோரிக்கைகள் விடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஒரு எம்.பி.யாகவும், கபினட் அமைச்சராகவும் இருந்தபோது, ​​பல பரிந்துரை கடிதங்களை வழங்கியதாகவும், மற்ற எம்.பி.க்களிடமிருந்தும் இது போன்ற கோரிக்கைகளை பெற்றதாகவும் நாமல் கூறினார்.

நான் அமைச்சராக இருந்தபோது பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பது குறித்து பரிசீலிக்கக் கோரி எனக்கும் கடிதங்கள் வந்திருந்தன.

இது ஒரு சாதாரண நடைமுறை என்றும் புதிதாக ஒன்றும் இல்லை என்றும், தகுதியின் அடிப்படையில் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபரை அமைச்சர் தீர்மானிக்கிறார் என்றும் நாமல் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

Leave a Comment