கொழும்பில் இருந்து பதுளை வரை ஒவ்வொரு வார இறுதியிலும் இன்று முதல் நகரங்களுக்கு இடையிலான அதி சொகுசு ரயில் சேவையில் ஈடுபடவுள்ளது.
“எல்ல ஒடிஸி” என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் சனிக்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு பதுளையை சென்றடையும்.
“எல்ல ஒடிஸி” கம்பஹா, வெயாங்கொட, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை மற்றும் எல்ல ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படும்.
இது ஞாயிற்றுக்கிழமை காலை 9.50 மணிக்கு பதுளை நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு கொழும்பை சென்றடையும்.
கொழும்பு – பதுளை பாதையில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களிலும் ரயில் நிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.




