ஊழலால் ஏற்பட்ட இழப்பை பொதுமக்கள் மீது சுமத்தக்கூடாது!

Date:

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் நுகர்வோர் கடும் சுமைக்கு ஆளாகியுள்ள வேளையில் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதற்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் ரஞ்சித் விதானகே, பொதுமக்களுக்கு தேவை சலுகைகளே தவிர கட்டண உயர்வு அல்ல என சுட்டிக்காட்டினார்.

இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றில் உள்ள தலைவர்களின் குறைபாடுகளினால் நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், இந்தப் பொறுப்பை பொதுமக்கள் மீது சுமத்தக் கூடாது என்றார்.

மின்சார சபையின் நஷ்டத்தை பொதுமக்கள் மீது திணிக்கக் கூடாது, அதற்குப் பதிலாக ஏன் இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விதானகே கூறினார்.

மின்சார சபையின் ஊழலே இந்த விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்