எனக்கு எதிராக சிலர் கடுமையாக உழைத்தார்கள்: நடிகை அமலாபால்

Date:

நடிகை அமலாபால் நடித்து தயாரித்த ‘கடாவர்’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்றும் எனக்கு எதிராக கடுமையாக சிலர் உழைத்தார்கள் என அமலாபால் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமலாபால் நடிப்பில் உருவான ‘கடாவர்’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்த நிலையில் அமலாபால் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது அமலாபால் பேசியபோது, ‘கொரோனா பாதிப்புக்கு பின்னர் இந்த திரைப்பட விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல இடையூறுகளுக்கு இடையே இந்த படத்தை முடித்துள்ளோம்.

இந்த படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல தடைகள் உருவானது. இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று சிலர் கடுமையாக உழைத்தனர். ஆனால் கடவுள் அருளால் இந்த திரைப்படம் தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. தமிழில் பல மெடிக்கல் க்ரைம் திரைப்படங்கள் வந்தாலும் தடவியல் துறையில் இதுவரை படங்கள் அதிகமாக வெளியாகவில்லை என்றும் காவல் துறையில் பணியாற்றும் தடவியல் துறை நிபுணர் கேரக்டரில் நடித்து இருக்கிறேன் என்றும் ரசிகர்கள் இந்த படத்திற்கு தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...

QR நடைமுறை மேலும் இறுக்கமாகும்

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்