ஐ.பி.எல் ஆரம்பிக்க முன்னரே ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா: ஆர்.சி.பி தொடக்கவீரருக்கும் தொற்று!

Date:

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 3வது வீரரும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து அடுத்த 10 நாட்களுக்கு அவரால் எந்தவிதமான போட்டியிலும் பங்கேற்க முடியாது. இதனால் வரும் 9ஆம் திகதி சென்னையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி மோதும் ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது

ஏற்கெனவே டெல்லி கபிடல்ஸ் அணியைச் சேர்ந்த சகலதுறை வீரர் அக்ஸர் படேல் கொரோனாவில் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதற்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிதின் ராணா கொரோனாவில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான இடதுகை ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் 15 ஆட்டங்களில், 473 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சராசரியாக 31.53 ரன்கள் சேர்த்திருந்தார்.

ஆதலால், இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் தேவ்தத் படிக்கல்லின் ஆட்டம் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனாவில் தேவ்தத் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவரால் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த முஷ்டாக் அலி கோப்பையில் 6 போட்டிகளில் 218 ரன்களை படிக்கல் குவித்து 41 ரன்கள் சராசரி வைத்திருந்தார். விஜய் ஹசாரே கோப்பையில் 7 போட்டிகளில் 737 ரன்கள் குவித்து 147.40 சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்