பருத்தித்துறையில் பொலிஸ் உத்தியோகத்தரை மோதி விட்டு சென்ற கள்ளமண் காரர்!

Date:

வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரி டிப்பர் வாகனம் மோதி படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் வடமராட்சி வல்லிபுக்குறுச்சியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கிலிருந்து டிப்பர் வாகனங்களில் சட்டவிரோதமாக மணல் அகழப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக உள்ளூர் மக்களால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனை அறிந்து பருத்தித்துறை பொலிஸ் நிலைய முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அஜித் தலைமையில் 6 பேர் கொண்ட பொலிஸ் பிரிவு சம்பவ இடத்துக்குச் சென்றது.

வல்லிபுரக்குறிச்சிப் பகுதியில் டிப்பர் வாகனம் வருவதைக் கண்ட பொலிஸார் அதனை மறிக்க முற்பட்டுள்ளனர். எனினும் டிப்பர் வாகனம் உப பொலிஸ் பரிசோதகரை மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பருத்தித்துறை பொலிஸார் மோதிவிட்டுத் தப்பித்த டிப்பர் மற்றும் சாரதியைத் தேடி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்