கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் பதும் கெர்னருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல, தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பாத்தும் கெர்னரை விடுவித்தார்.
இருப்பினும் அவர் மீது சர்வதேச பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாகவும், பாராளுமன்றத்திற்கு செல்லும் பொல்துவ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகளை அகற்றியதாகவும், கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கெர்னர் ஜூலை 18 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டார். எனினும், உடல்நலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி ஆஜராகத் தவறிவிட்டார்.
எனினும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.