தூண்டிலில் சிக்கிய இராட்சத கொடுவா மீன்!

Date:

25 கிலோகிராம் எடையுள்ள கொடுவா மீன் சிறிய இயந்திர தூண்டிலில் சிக்கியுள்ளது.

அம்பாறை மாவட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளை இணைக்கும் முகத்துவாரத்து கடற்கரையில் இரு இளைஞர்கள் கடலில் தூண்டில் மூலம் குறித்த மீனை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்.

சுமார் 18 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய குறித்த மீன் தூண்டிலில் சிக்கிய போதும், அதிலிருந்து விடுபட போராடியதால், இளைஞர்களை மீனை கரைக்கு கொண்டு  வருவதற்கு சிரமப்பட்டனர்.

அத்துடன் அம்பாறை மாவட்ட கடற்கரையில் பருவ மாற்றம் காரணமாக அதிகளவில் மழை பெய்து வருவதுடன் சில முகத்துவாரங்களும் வெட்டப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து பொழுதுபோக்கிற்கான சிலர் தூண்டில் மூலம் அப்பகுதியில் மீன்களை பிடித்து வருவதனை காண முடிகின்றது.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

தஞ்சையில் காவல் நிலைய விசாரணைக்குப் பின் உதயநிதி விடுவிப்பு

‘இரட்டை அர்த்த’ பேச்சு விவகாரத்தில் கைதான சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...

மொட்டு செயலாளரின் மிரட்டலை சிஐடி விசாரிக்கும்

பொலிஸ் மா அதிபர் (IGP) குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)...

ஈரான் போரின் போது அமெரிக்கா தனது நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் ‘ஏறக்குறைய அனைத்தையும்’ பயன்படுத்தியுள்ளது

ஈரானுடனான தனது ஐந்தாண்டுப் போரின் போது, ​​அமெரிக்க இராணுவம் தனது கையிருப்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்