26.7 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இந்தியா

பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென்ற கனல் கண்ணன் மீது புகார்!

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது காவல்துறை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் துரை.அருண் என்பவர் காவல்துறை இயக்குநரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என கனல் கண்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாகவும் இதனால் சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பெயரில் இந்து முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் இந்தப் பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில் அதன் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் நடைபெற்றது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன்-

ஒரு நாளைக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது கோவிலின் முன்பாக கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் எனக் கூறியிருந்தார்.

இந்தப் பேச்சுக்கு எதிராக கண்டனம் வலுத்து வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆன்மீக சங்கம நிகழ்வில் பாரிய தீ விபத்து

east tamil

மணமகனுக்கு வயது 64; மணமகளுக்கு 68 – முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம்

Pagetamil

தி.மு.கவில் இணைந்தார் சத்யராஜ் மகள்!

Pagetamil

காதலனை விசம் வைத்து கொன்ற யுவதிக்கு தண்டனை ஒத்திவைப்பு: பெண்ணல்ல பிசாசு என சாடல்!

Pagetamil

ரூ.6 கோடி மதிப்பிலான நகைகளுடன் மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா!

Pagetamil

Leave a Comment