25.3 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில்உள்ள சகல பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களும் இன்று ஒரு மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இருந்த எரிபொருட்கள் பொலிசாரால் மீட்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக இந்த ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய் மற்றும் ஒட்டிசுட்டான், கரைத்ததுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மணலாறு பிரதேச செயலகங்களிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதே வேளை மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய்பிரதேச செயலகங்களிலும் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றிருந்தது . ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “ஊடக சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யாதே”, “அலுவலகத்தில் உட்புகுந்து பொருத்தமற்ற முறையில் கையாண்ட சகல தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”, “தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக ஊடகத்தை பயன்படுத்தாதே”, “பொதுமக்களை தவறாக வழிநடத்தாதே”  போன்றசுலோகங்களை ஏந்தியவாறு பிரதேச செயலக வாயில்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நிர்வாக செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் பொதுமக்கள் வெளியிலே காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் காணப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ தங்குமிடத்தில் எரிபொருள் பதுக்கிய வைக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், குளியலறையில் வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதியில் வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

east tamil

இலங்கைக்கு இந்திய அரசின் நிதி ஒதுக்கீடு

east tamil

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

Leave a Comment