25 C
Jaffna
February 23, 2025
Pagetamil
இலங்கை

பெரமுனவினரை திருப்திப்படுத்தவே போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை!

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை கைது செய்வதையும் ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)  அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.

மறுநாள் பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தை கையளிப்பதாக உறுதியளித்த போதிலும், போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆயுதப்படைகளை பயன்படுத்தினார்.

ரணிலை ஜனாதிபதி ஆக்குவதற்கு வாக்களித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்களை திருப்திப்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். “காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குப் பிறகும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கை உள்ளது. பல்வேறு இன்னல்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் தட்டுப்பாடு காரணமாக எழுந்த பொதுமக்கள் போராட்டத்தின் காரணத்தை அரசாங்கம் உணரவில்லை. அடக்குமுறை மூலம் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் தடுக்க முயற்சிக்கிறது“ என்றார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க, அடக்குமுறை சட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்டம் போன்ற ஒழுங்குமுறைகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்த திஸாநாயக்க, அத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை அரசாங்கத்தால் இன்றையதினம் தடை செய்யப்பட்ட அமைப்புகள்

east tamil

அரிசியை பதுக்கிய வியாபாரிக்கு நடந்த கதி

east tamil

சேமிப்பு மின் திட்டத்தில் இலங்கையின் அடுத்த அடி

east tamil

தேசிய மக்கள் சக்தி அலையை தமிழ் கட்சிகள் சமாளிக்கப் போவது எப்படி?

Pagetamil

கொலையாளிகளின் மரணம் பற்றி பொலிசாரின் அறிக்கை

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!