கோட்டாவும், மஹிந்தவும் போய்விட்டார்கள்; நாட்டில் இப்போது பாலும், தேனும் ஓடுகிறதா?: கேட்கிறார் மஹிந்தவின் கூட்டாளி!

Date:

எழுபத்திரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட போது சட்டத்தரணிகள் அமைப்போ மனிதாபிமான அமைப்புகளோ தூதுவர்களோ அந்தக் குற்றத்திற்கு எதிராக ருவிட்டர் செய்திகளை வெளியிடவில்லை என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

69 இலட்சம் மக்களின் ஆணை பெற்று ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்சவும், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்துடன் பிரதமர் பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவும் வீட்டுக்கு சென்றால், நாடு சுபீட்சமாகும் என வீதியில் இறங்கிப் போராடினார்கள். அவர்கள் சொன்னது உண்மையெனில், இப்பொழுது பூக்கள் பூத்து, விதைகள் விதைத்து, பாலும் தேனும் ஓடத்  தொடங்கியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வீடுகள் எரிந்ததால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெருவில் விழுந்து கிடப்பதாகவும், தானும் தெருவில் விழுந்தவர் தான் என்றும் கூறினார்.

காதணி அணிந்து தாடி வளர்த்தவர்களின் போராட்டங்களில் தமக்கு பிரச்சினை இருப்பதாகத் தெரிவித்த விமலவீர திஸாநாயக்க, இவர்கள் இந்த நாட்டை எங்கு கொண்டு செல்ல முயல்கிறார்கள் என்பது பொதுப்புத்தி உள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும் எனவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்