எரிபொருள் விநியோகம் சீரில்லாவிட்டால் நாளை பாடசாலை வாகனங்கள் இயங்காது

Date:

பஸ்கள் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தை மேற்கொள்ள முடியாது என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை 3 மணி முதல் பணிப்புரை விடுத்த போதிலும் அது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.

சில டிப்போக்கள் வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை மட்டுமே எரிபொருளை வழங்கியதாகவும், சில எரிபொருளை முழுமையாக வழங்கவில்லை என்றும் மல் ஸ்ரீ கூறினார்.

இன்றும் எரிபொருளை விநியோகிக்க முடியாது என குறிப்பிட்ட டிப்போக்கள் தெரிவித்ததாக மல் ஸ்ரீ குறிப்பிட்டார்.

நாளைய தினம் பாடசாலை வாகனங்கள் மற்றும் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை பாடசாலை போக்குவரத்தை இலகுபடுத்த முடியாது என மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அறிவிக்கப்படும் எனவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பன்னிப்பிட்டியாவில் பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

கொழும்பு, பன்னிப்பிட்டிய – தெபானம பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்புப் பொருட்கள்...

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதிய கோர விபத்து- 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20)...

நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்: ஒருவர் மீட்பு- இருவர் மாயம்

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர்  கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்