27.6 C
Jaffna
March 2, 2025
Pagetamil
இலங்கை

ரணிலின் ஜனாதிபதி பதவி மக்கள் ஆணையை பிரதிபலிக்கவில்லை: ஹர்ஷ டி சில்வா!

காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் முற்றிலும் தேவையற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பெற்றுள்ள அதிகாரமானது மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை எனவும், இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிதைவு எனவும் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நியாயமான மற்றும் அமைதியான போராட்டங்களுக்கு தான் தொடர்ந்து ஆதரவளிக்கும் அதே வேளையில், போராட்டத்தை சட்டத்திற்கு புறம்பாக மாற்றுவதற்கும், அவர்களின் நலனுக்காக நாட்டை மேலும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கும் வன்முறையாளர்களின் ஊடுருவலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு உண்மையான நோக்கங்கள் இருந்தால், மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி நாட்டை ஸ்திரப்படுத்த ஒருமித்த சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்றும், இதனால் நாடாளுமன்றம் மக்களின் ஆணையை பிரதிபலிக்கும் என்றும், அமைப்பு மாற்றங்கள் ஒரே இரவில் நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளை ஈ தாக்கமும் அதன் கட்டுப்பாட்டு பொறிமுறைகளும்

Pagetamil

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தலைமறைவு: வெளிநாட்டு பயணத்தடை!

Pagetamil

‘யாழ் போதனா வைத்தியசாலை சர்ச்சைக்கு இதுதான் காரணம்’: தாதியர் சங்கம் சொல்லும் காரணம்!

Pagetamil

‘ஊடகப் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவோம்’: அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திடம் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதி

Pagetamil

தேங்காய் விலை வழமைக்கு திரும்பும்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!