பேத்திக்கு அடித்த மூதாட்டி: அடித்தே கொன்ற மகள்!

Date:

38 வயதுடைய மகளொருவர் 65 வயதுடைய தனது தாயாரை கொட்டனால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரளை, பேஸ்லைன் மாவத்தை, சிங்கபுர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மொஹமட் ஜஸ்மின் என்ற வயோதிப தாயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் 38 வயதுடைய மகளும், அவரை தாக்க பயன்படுத்திய மூன்றடி நீளமுள்ள கொட்டனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரும் கொலை செய்யப்பட்ட தாயும் ஒரே வீட்டில் வசித்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் ஆறு வயது மகளை தாய் தாக்கியதாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த மூதாட்டி வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியவர் என விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்