ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி பதவிக்கு திரு.ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரும மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.




