Pagetamil
இந்தியா

துணிக்கடையில் திருடச் சென்றவர் பொம்மையுடன் பாலியல் சேட்டை!

துணிக்கடையில் திருட புகுந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த பொம்மையுடன் சுயஇன்பத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஜோசப் பவின். இவர் நாகர்கோவில் குருசடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். ஜோசப்பவின் செட்டிகுளம் பகுதியில் துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். வியாழன் அன்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்றபோது துணிகள் கலைந்துக் கிடந்தது. இதனால், யாரோ திருடர்கள் புகுந்திருக்கலாம் என்று நினைத்த ஜோசப், இதுகுறித்து கோட்டார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். கடையில் இருந்த விலை உயர்ந்த துணிகள் மாயமாகி இருப்பதாக ஜோசப் பவின் தெரிவித்தார். கடையின் மேல் பகுதி உடைக்கப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் அதன் வழியாக கடைக்குள் புகுந்து துணிகளை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

கடையில் இருந்த காண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதில் கொள்ளையன் கடைக்குள் வருவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. கடை முழுவதும் சுற்றித்திரிந்த கொள்ளையன் கல்லாப்பெட்டியை தேடி பின்னர், அதில் பணம் இல்லை என்பதால் அங்கும் இங்கும் நடமாடும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

மேலும், கடையில் ஆடையுடன் வைக்கப்பட்டிருந்த பொம்மை ஒன்றின் அருகில் அமர்ந்து அதன் ஆடைகளை கலைத்து அதனுடன் சுய இன்பத்தில் ஈடுபடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையன் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

நல்லி குப்புசாமி, அஜித், ஷோபனாவுக்கு பத்ம பூஷண்; அஸ்வின், வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

Pagetamil

வேங்கைவயல் சம்பவம் தனிப்பட்ட விரோதம்: தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் – தமிழக அரசு வேண்டுகோள்

Pagetamil

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி

east tamil

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ

east tamil

Leave a Comment