இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இன்று அதிகாலை 03.15க்கு டுபாய் நோக்கிப் புறப்படவிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானமான EK-349 இல் செல்வதற்காக பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பசிலின் பிரவேசத்தை தொடர்ந்து, கட்டணம் செலுத்தப்பட்டு பிரவேசிக்கும் விருந்தினர் நுழைவாயிலில் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பசிலை வெளியேறுமாறு கோசமிட்டனர்.
இதையடுத்து, தனது விமானத்திற்கு செல்லாமல், பசில் விமான நிலையத்திலிருந்து வெளியேறினார்.
பசில் டுபாய் ஊடாக தனது தாயமான அமெரிக்காவிற்கு செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பசில் ராஜபக்ச திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Emigration and immigration officers of the Silk Route departure terminal at the BIA have withdrawn from duties when former Minister Basil Rajapaksa arrived there to leave the country. Subsequently it is reported that Basil Rajapaksa has turned back#lka #SriLankaCrisis pic.twitter.com/CE4fWRZIkl
— Pagetamil (@Pagetamil) July 12, 2022