திருகோணமலை ஐஓசி எரிபொருள் களஞ்சியசாலையில் இருந்து ஹப்புத்தளை எண்ணெய் களஞ்சியசாலைக்கு 33000 லீற்றர் டீசலை ஏற்றிச் சென்ற எரிபொருள் பவுசர் இன்று (11) காலை ஹப்புத்தளை பங்கெட்டிய, முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு அருகில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தையடுத்து, பவுசரில் இருந்து பெருமளவு எரிபொருள் வழிந்தோடியது. அந்த எரிபொருளை பெறுவதற்கு அந்த பகுதி மக்கள் முண்டியடித்தனர்.
வீதி வழுக்கி பவுசர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கு காரணமென தெரியவந்துள்ளது.


-இரா.சுரேஷ்குமார்-




