அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா பதவி விலகினார்!

Date:

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விலக தீர்மானித்துள்ளார். இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பதவியில் இருந்து விலகுமாறு நிமல் சிறிபால டி சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரையை அடுத்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

விமானப் போக்குவரத்து அமைச்சுமீது தனியார் நிறுவனமொன்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் வரை,  அமைச்சர் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், விசாரணைகள் நிறைவடைந்து உரிய கடிதம் வரும் வரை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

spot_imgspot_img

More like this
Related

ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கி விட்டது!

அமெரிக்காவும் ஈரானும் இன்னும் இறுதிக் கட்டத்தை எட்டவில்லை, ஆனால் தங்கள் மோதலைத்...

டெங்கு உயர் ஆபத்து மாவட்டமாக கொழும்பு அறிவிப்பு; ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை

டெங்கு அபாயம் அதிகரிப்பு: கொழும்பில் ஒரு வார விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கை கொழும்பு...

அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகுமா? உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு

ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்