காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா.
இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கையின் முதுகெலும்பை உடைத்து, வெறும் 23 ஓவர்களுக்குள் கதையை முடித்தனர்.
இந்த டெஸ்ட் போட்டியே வெறும் இரண்டரை நாட்கள்தான் நடந்தது.
நதன் லயன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்வெப்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இரண்டாபது இன்னிங்ஸில் இலங்கை 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அவுஸ்திரேலியா வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின் மதிய போசன இடைவேளைக்கு முன்னதாகவே ஆட்டத்தை முடித்துக் கொண்டது அவுஸ்திரேலியா.
2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் அவுஸ்திரேலியா பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இலங்கையில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே, பெற்ற 7 வெற்றிகளும் அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி பெற்றவை.
காலி மைதானத்தில் இலங்கை 21 முறை நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடி, 4 முறை தோல்வியை சந்தித்துள்ளது. இதில், கடந்த 18 மாதங்களில் மட்டுமே 3 முறை தோல்வியடைந்துள்ளது.
இந்தப் போட்டியில் லயன் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அதிக டெஸ்ட் விக்கெட் கைப்பற்றியவர்களின் முதல் 10 இடங்களிற்குள் நுழைந்தார்.
ஹெட் 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார். இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக முழுதாக ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை.
இரண்டாவது நாளில் கடினமான துடுப்பாட்ட களத்தில் 77 ரன்கள் எடுத்த கேமரூன் கிரீன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்றிரவு கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டதால், இலங்கை அணியில் அனுபவ வீரர் அஞ்சலோ மத்யூஸ் அணியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆடினார்.
காலையின் இரண்டாவது ஓவரில் அவுஸ்திரேலியாவை 321 ரன்களுக்கு சுருட்டியது. அசித பெர்னாண்டோ கம்மின்ஸ் மற்றும் ஸ்வெப்சன் ஆகியோரை இரண்டு அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங்கிங் யோர்க்கர்களில் வீழ்த்தினார்.
இலங்கை இரண்டாவது இன்னிங்ஸை தொங்கிய போது, மிட்செல் ஸ்டார்க்கின் முதல் ஓவரில் 17 ரன்கள் எடுத்தது. கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் ஓவரில் பெறப்பட்ட அதிக ஓட்டம் இதுவாகும்.
எனினும்,சுழற்பந்து வீச்சாளர்கள் நதன் லயன், ஸ்வெப்சன் பந்துவீச ஆரம்பித்ததும், நிலைமை மாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்தன.
இறுதியில் 22.5 ஓவர்களில் இலங்கை 113 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது. திமுத் கருணாரத்ன பெற்ற 23 ஓட்டங்களே அதிகபட்சமானவை.
ட்ராவிஸ் ஹெட் 10 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும், நதன் லயன் 31 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக இலங்கை முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்களையும், அவுஸ்திரேலியா 321 ஓட்டங்களையும் பெற்றன.