Pagetamil
உலகம்

ரூ.43,000 சம்பளத்திற்கு பதிலாக ஊழியரின் கணக்கில் வைப்பிலிடப்பட்ட ரூ.1.42 கோடி பணம்!

சிலி நாட்டில் ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.43000 க்கு பதிலாக ரூ.1.42 கோடி சம்பளமாக கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக தெரிவித்த ஊழியர் தலைமறைவாகி உள்ளார். அதனால், இப்போது அந்த நிறுவனம் சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை அணுக முடிவு செய்துள்ளது.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று சிலி. அந்த நாட்டில் இயங்கி வரும் சியல் (Cial) என்ற நிறுவனத்தில்தான் இது நடந்துள்ளது. கடந்த மே மாதம் சம்பந்தப்பட்ட ஊழியரின் வங்கிக் கணக்கில் அவரது வழக்கமான மாதச் சம்பளத்தை காட்டிலும் 246 மடங்கு கூடுதலாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கணக்கு வழக்குகளை அந்நிறுவனம் சரிபார்த்த போதுதான் இந்த தவறு நடைபெற்றுள்ளதை கவனித்துள்ளது. தொடர்ந்து அந்த ஊழியரை தொடர்பு கொண்டுள்ளனர்.

அவரும் தன் வங்கிக்கு நேரில் சென்று பணத்தை நிறுவன கணக்கிற்கு ரிட்டர்ன் செய்யும் பணியை கவனிப்பதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அவரை அதன் பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது. போனில் தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.

பின்னர் அந்த நபர், மனித வள பிரிவு அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வேலை செய்த சோர்வு காரணமாக தான் தூங்கிவிட்டதாகவும், வங்கிக்கு செல்வதாகவும் பணம் அனுப்பும் பணியை கவனிப்பதாகவும் சொல்லியுள்ளார்.

ஆனால் ஜூன் 2ஆம் திகதியன்று தனது விலகல் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர்தான் அந்த ஊழியர் தனக்கு கிடைத்த தொகையோடு தலைமறைவாகி உள்ளார் என்பதை நிறுவனம் உணர்ந்துள்ளது. தற்போது பணத்தை அவரிடம் இருந்து மீட்கும் நோக்கில் சட்ட ரீதியிலான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது அந்நிறுவனம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

Leave a Comment