வவுனியாவில் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கையேழுத்து சேகரிப்பு நடவடிக்கை இலுப்பையடி சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடவடிக்கை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரி, பட்டினிச் சாவைத் தடுக்க மக்களே முன்வாரீர் எனும் தொனிப்பொருளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் 25 ஆயிரம் பேரின் கையெழுத்து பெறும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக இன்று வவுனியா இலுப்பையடி சந்தியில் கையேழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இந்நடவடிக்கையில் இன, மொழி பேதங்களுக்கு அப்பால் பல மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையேழுத்திட்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1