உலக பொருளாதார மன்றத்தின் 2021ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் இலங்கை 14 இடங்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கையை 0,670 மதிப்பெண்களுடன் 116 வது இடத்தில் உள்ளது.
தெற்காசியாவின் அரசியல் துறையில் பெண்களின்பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
தெற்காசியாவின் எந்த நாட்டிலும் பாராளுமன்றத்தில் பெண்களின் பங்கு 33% க்கு மேல் இல்லை. அதிக மக்கள் தொகை கொண்ட மூன்று நாடுகளில், இந்த பங்கு 14 முதல் 20% வரை உள்ளது. சில நாடுகளில் இது 5.4 (இலங்கை) மற்றும் 4.6% (மாலத்தீவு) வரை குறைவாக உள்ளது.
இந்த பிராந்தியத்தில் உள்ள ஏழு நாடுகளில் ஐந்தில் பெண்கள் கடந்த 50 ஆண்டுகளில் ஒரு முறையாவது அரச தலைவர் பதவிகளை வகித்துள்ளனர். பங்களாதேஷில் பெண்கள் ஆண்களை விட நீண்ட காலம் அரச தலைவர் பதவியை வகித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான், பூட்டான் மற்றும் மாலத்தீவில் மட்டுமே சமீபத்திய வரலாற்றில் ஒரு பெண் தலைவராக இருந்ததில்லை.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவைத் தொடர்ந்து, மிகக் குறைந்த செயல்திறன் கொண்டதாக தெற்காசியா பதிவாகியுள்ளது. இங்கு பாலின இடைவெளி 62.3% ஆக பதிவாகியுள்ளது.
இந்த பகுதிகளில் சமீபத்திய காலங்களில் முன்னேற்றம் மிகவும் மெதுவாக உள்ளது.
இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பாலின இடைவெளியில் ஏறக்குறைய 3 சதவீத புள்ளிகளின் சரிவு பதிவாகியுள்ளது. இந்த பிராந்தியத்தில் பாலின சமத்துவம் ஏற்பட திட்டமிடப்பட்ட காலத்தில் கணிசமான தாமதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தற்போதைய நிலவரத்தின் படி இந்த பிராந்தியத்தில் பாலின சமத்துவம் ஏற்பட
195.4 ஆண்டுகள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பூட்டான் மற்றும் நேபாளம் மட்டுமே இந்த ஆண்டு பாலின சமத்துவத்தை நோக்கி சிறிய ஆனால் நேர்மறையான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன, அதே நேரத்தில் இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற அனைத்து நாடுகளும் சற்று குறைக்கப்பட்ட அல்லது தேக்கமான செயல்திறனைப் பதிவு செய்துள்ளன.