நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு எரிபொருளின் விலையும் ரூ.60க்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
உலக சந்தையில் டொலர் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24 ஆம் திகதி அமுலுக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக கூறியிருந்தது.
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 74 ரூபாவாலும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 78 ரூபாவாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 56 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 65 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை ரூ.210 ஆலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1