26.3 C
Jaffna
December 20, 2024
Pagetamil
சினிமா

‘தளபதி 65’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஜய். இந்தப் படத்தை ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வருகிறது படக்குழு.

நீண்ட நாட்களாகவே இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (31) சென்னையில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 2 நாட்கள் மட்டும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்பு தேர்தல் முடிந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளது.

‘தளபதி 65’ படப்பூஜையில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன. விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக புகைப்படங்களை வெளியிடும் எனத் தெரிகிறது. சென்னை, ஹைதராபாத், ஐரோப்பா உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளது.

‘தளபதி 65’ படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டெ நடிக்கவுள்ளார். அவரைத் தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் பட்டியலை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

Leave a Comment