112 மதுபான போத்தலுடன் இந்தியாவிற்கு புனித பயணம் சென்ற இலங்கைத் தமிழ்க்குடும்பம்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Date:

சென்னை விமான நிலையத்தில் 1,594 கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டு, 112 மதுபான போத்தல்களை எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை குடும்பத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இலங்கை பிரஜைகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி சி சரவணன், சுங்க சாமான்கள் பிரகடன விதிமுறைகளின்படி, 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஆபரணங்களை எடுத்துச் சென்றால்., பயணிகள் முறையான அறிவிப்பை வெளியிடுவது கட்டாயம் என்று சமீபத்தில் தீர்ப்பளித்தார்.

சந்திரசேகரம் விஜயசுந்தரம், அவரது மனைவி விஜயசுந்தரம் மகாலட்சுமி, அவர்களது இரண்டு பிள்ளைகள் மற்றும் மூன்று பேர் உட்பட மனுதாரர்கள் மே 6, 2017 அன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

அவர்கள் தங்களுடைய நகைகளின் மதிப்பை தெரிவிக்காமல் கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்ற போது, ​​சுங்கத்துறை அதிகாரிகள் விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் மதுப் பொத்தல்களை பறிமுதல் செய்ததுடன், சுங்க விதிகளின் கீழ் 16.30 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தாங்கள் யாத்ரீகர்கள் என்றும், தங்கள் வழக்கப்படி விலை உயர்ந்த நகைகளை அணிந்திருப்பதாகவும் மனுதாரர்கள் கூறியதை சுட்டிக்காட்டிய நீதிபதி, மனுதாரர்கள் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி 112 மதுப் போத்தல்களை எடுத்து சென்றதுடன், அவற்றை அறிவிக்காமல் கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இந்தியப் பயணம் முற்றிலும் புனிதப் பயணம் அல்ல என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்