Pagetamil
ஆன்மிகம் கிழக்கு

வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்திச்சடங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி திருச்சடங்கு உற்சவம் நேற்று மாலை பக்தர்களின் ஆரோகரா கோசத்துடனும் சிலம்பு ஒலியுடன் திருக்குளிர்த்தி ஆடல் வைபவத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த மாதம் 9 ஆம் திகதி அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வந்தாறு மூலை 7 குடி மக்களின் பங்களிப்புடன் தொடர்ந்து 5 நாட்கள் திருச்சடங்கு நடைபெற்று நேற்று (13) மாலை வைகாசி திங்கள் கிழமையன்று திருக்குளிர்த்திவைபவத்துடன் திருச்சடங்கு இனிது நிறைவு பெற்றது.

நேற்றைய நாள் சாடிப்பானை எடுத்து பக்கப்பானைகள் வைத்தலுடன் பொங்கல் வைபவம் இடம்பெற்றது.அத்தோடு உடுக்கு காவியம் பாடப்பட்டு தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசை இடம்பெற்று அம்பாள் உள் வீதி வலம் வந்து பக்தர்கள் புடை சூழ வெளியில் உள்ள திருக்குளிர்த்தி பாடும் இடத்திற்கு சென்று திருக்குளிர்த்தி பாடல் பாடப்பெற்று திருக்குளிர்த்தி வைபவம் நடைபெற்று அம்பாள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கிஅ ம்பாள் மீண்டும் ஆலயத்திற்குள் சென்றதுடன் பூசை நிகழ்வுகள் யாவும் சிறப்hhக நடைபெற்றது.

இவ்வருடம் வழக்கத்திற்கு மாறாக அடியார்கள் பசும்பாலில் பொங்கல் தயாரித்து தங்களது நோத்திக்கடனை செலுத்தினார்கள்.

திருச்சடங்கானது ஆலயத்ததலைவர் சொ.தங்கராசாவின் தலைமையில் ஆலயகுரு கு.குணரெட்ணம் நடாத்தி வைத்தார்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவ் ஆலயத்தில் சிலம்பு ஓசை கேட்டமையால் மாவட்டத்தில் உள்ள மக்கள் பலர் சென்று சிலம்பின் ஒலியினை கேட்டமை அம்பாளின அற்புத செயலாக கருதப்பட்டு பிரதேச மக்கள் அம்பாளை போற்றி வணங்கி வருகின்றனர்.

-வாழைச்சேனை நிருபர்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெருகலில் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு – கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

east tamil

லசந்த விக்கிரமதுங்கவின் 16வது நினைவேந்தல் இன்று

east tamil

கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகம் வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி வலியுறுத்தல்

east tamil

வாழைச்சேனையில் கசிப்பு வேட்டை

Pagetamil

கிழக்கு மாகாண சுற்றுலா துறையை மேம்படுத்த முயற்சி

east tamil

Leave a Comment