27.5 C
Jaffna
March 1, 2025
Pagetamil
கிழக்கு

ஹபாயா சர்ச்சை: சண்முகா இந்துக்கல்லூரி அதிபருக்கு அழைப்பாணை!

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்ற ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஹபாயா சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இரண்டு முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வருவதற்கு பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் தற்காலிகமாக வேறு பாடசாலைகளிற்கு இணைக்கப்பட்டனர்.

கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க சென்ற பெப்ரவரி மாதம் 2ம் திகதி கடமையேற்பதற்காக சென்றிருந்தபோது மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனது சட்டரீதியான கடமையை செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பெயரின் சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சென்ற மார்ச் மாதம் பஹ்மிதா றமீஸ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

குறிப்பிட்ட வழக்கில் ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸன் றுஷ்தி, முஹைமின் காலித் மற்று ஸாதிர் அஹமட் ஆகியோர் ஆஜராகி சமர்ப்பணம் செய்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இம்மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டத்தரணிகளான முபஸ்லீன் மற்றும் றிஸ்வான் ஆகியோர் வாதிதரப்பில் ஆஜராகி இருந்தனர்.

நீதிமன்ற நடைமுறைகளின்படி பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.

இவ்வழக்கானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

குடிசைகளை எரித்த வனவளத் திணைக்கள அதிகாரிகள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!