Pagetamil
முக்கியச் செய்திகள்

மணிவண்ணன் தரப்பை கட்சியை விட்டு நீக்கும் விவகாரம்: முன்னணியின் மனு தள்ளுபடி!

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்குவதாக அண்மையில் அகில இலங்கை காங்கிரஸ் அறிவித்தது.

இதற்கு எதிராக யாழ் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வி.மணிவண்ணன், பா.மயூரன் தாக்கல் செய்த மனுவையடுத்து, அவர்களை கட்சியை விட்டு நீக்கும் முடிவிற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

இந்த தடைக்கு எதிராக, இகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர்
மாகாண குடியியில் மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடையை செல்லுபடியற்றதாக்க கோரியிருந்தனர்.

இந்த மனுவை மாகாண குடியியல் மேல்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

Leave a Comment