27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கைக்கான சேவைகளை இடைநிறுத்தியது ரஷ்யாவின் Aeroflot நிறுவனம்!

கொழும்புக்கான (இலங்கை) வணிக விமான சேவையை இடைநிறுத்துவதாக, ரஷ்யாவின் Aeroflot நிறுவனம் அறிவித்துள்ளது.

“இலங்கைக்கான விமானங்களின் தடையற்ற சேவையின் உத்தரவாதங்கள் தொடர்பான சாதகமற்ற சூழ்நிலையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று ஏரோஃப்ளோட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்புக்கான டிக்கெட் விற்பனையையும் விமான நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, Aeroflot Airbus A330 கடந்த வியாழன் காலை கொழும்பு வந்தடைந்தது. அன்றைய நாளில் மீண்டும் மொஸ்கோவிற்கு திரும்புவதாக இருந்தது.

இந்த விமானம் உட்பட பல விமானங்கள் ஐரிஷ் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக நிறுவனத்திற்கு காப்பீட்டு பிரீமியத்தை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. தீர்வாக, ஏரோஃப்ளோட் இந்த விமானங்கள் அனைத்தையும் ரஷ்யாவில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் மறுகாப்பீடு செய்துள்ளது.

அயர்லாந்தின் Celestial Aviation Trading Limited இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பிரீமியத்தை நிறுத்திவைத்தமைக்கு எதிராக அவர்கள் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஜூன் 2 ஆம் திகதி பிற்பகல் பல சட்டத்தரணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், விமானத்தின் பைலட்டுகளிடம் இந்த தடை உத்தரவை கையளித்தனர், பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய பிரதான இடம்பெயர்வு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரஷ்யாவுக்குத் திரும்பும் விமானத்தை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவையடுத்து, நேற்று முன்தினம் (ஜூன் 2) நண்பகல் முதல் ஏரோஃப்ளோட் நிறுவன விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள வர்த்தக மேல் நீதிமன்றம் ரஷ்ய விமானம் குறைந்தபட்சம் ஜூன் 16 வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது.

இந்த விவகாரம் இரு நாடுகளிற்குமிடையில் இராஜதந்திர பதற்றத்தை உருவாக்கியுள்ளதுடன், இலங்கைக்கு பலத்த அடியையும் ஏற்படுத்தும்.

இலங்கைக்கு தற்போது ரஷ்ய சுற்றுலாப்பயணிகளே அதிகளவில் வருகிறார்கள்.  இந்த குளிர்காலத்தில் சுமார் 400,000 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரவுள்ளதாக விமான சேவைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஏரோஃப்ளோட் வாரத்தில் மூன்று நாட்கள் வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரடி விமானங்களை இயக்குகிறது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

2023 உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Pagetamil

UPDATE: காரைதீவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரின் சடலங்களும் மீட்பு!

Pagetamil

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஒரே பார்வையில் இலங்கைப் பாதிப்பு விபரம்!

Pagetamil

Leave a Comment