வவுனிக்குளம் மீனவர்களின் வலைகள் மற்றும் துடுப்புகள் இனந்தெரியாத நபர்களினால் அறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது..
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட வவுனிக்குளம் அம்பாள்புரம் கிராம மீனவர்களின் வலைகள் மற்றும் துடுப்புகள் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் அறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தொழில் முடித்து வீடுதிரும்பிய நிலையில் இன்று அதிகாலை தொழிலுக்கு வந்திருந்த நிலையில் மீனவர்களினால் வலைகள் அறுக்கப்பட்டு துடுப்புகள் சேதமாக்கப்பட்டுள்ளமையை கண்ணுற்றதாக மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.
குறித்த விசமத்தனமான செயலால் பிரதேச மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1