யாழ் வடமராட்சி, மண்டான் பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் உயிரிழந்தார்.
மண்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் செலுத்திக் கொண்டிருந்த மாணவனிற்கு முன்னால் மாடு ஒன்று குறுக்காக சென்றதாகவும், இதனால் பதட்டமைந்த மாணவன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மதிலுடன் மோதஜ விபத்து ஏற்பட்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாகவே காயமடைந்த மாணவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது மருத்துவ மனையில் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ் நெல்லியடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்து சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணமடைந்துள்ளான்.
குறித்த நபர் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, குஞ்சர்கடை சந்திக்கும் புறப்பொறுக்கிக்கும் இடைப்பட்ட பகுதியில் கண்டர் ரக வாகனமொன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதுண்டத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.