31.9 C
Jaffna
April 28, 2024
இலங்கை

தொடரும் வேட்டை: பதுக்கி வைக்கப்பட்டிருந்த 59,000 லீட்டர் எரிபொருள் மீட்பு!

முறையான உரிமம் இன்றி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த 137 பேர் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

429 சோதனைகளில் 27,000 லிட்டர் பெட்ரோல், 22,000 லிட்டர் டீசல் மற்றும் 10,000 லிட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக கொள்வனவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்த பின்னர் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

118, 119, அல்லது 1997 என்ற இலக்கத்தின் ஊடாக சட்டவிரோத எரிபொருள் விற்பனை தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிபொருளில் கலப்படம் செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எஸ்.எஸ்.பி தல்துவ தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸார் சோதனைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பாக எரிபொருளை சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை எஸ்.எஸ்.பி தல்துவா வலியுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

யாழில் போதை ஊசி ஏற்றப்பட்டு சீரழிக்கப்பட்ட பெண்: சூத்திரதாரியான சகோதரனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment