காலிமுகத்திடல் தாக்குதல்தாரி கைது!

Date:

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதான சந்தேகநபர் ஹோகந்தர பிரதேசத்தில் மறைந்திருந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஏனைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுடன் ஸ்கூட்டரில் காலி முகத்திடலுக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மிரிஹான போராட்டத்தின் போது, பின்னர் எரிக்கப்பட்ட இராணுவ பேருந்தை ஓட்டிச்சென்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்பாக நிறுத்தியதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த நபர் போராட்டக்காரர்களுக்கு எதிராக பேசியதையும் காணமுடிந்தது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபர், விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மற்றும் பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் நேற்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்