சுதந்திரக்கட்சியில் இருந்து மேலும் 5 பேர் தாவுகிறார்கள்!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நிமால் சிறிபால டி சில்வா அமைச்சர் பதவியேற்றுள்ள நிலையில், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.மஹிந்த அமரவீர அமைச்சரவை அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

எஞ்சிய 4 பேரில் மூவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்த போதிலும், பதவிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என அறிவித்துள்ளது. எனினும், அதன் எம்.பிக்கள் அமைச்சு பதவிக்காக தாவிக் கொண்டிருக்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பங்கு: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத் தடுப்புக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்