எரிபொருள் நெருக்கடி காரணமாக மின் தடைகளை திருத்தும் பணிகள் தாமதமாகலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சாரம் தடைபடும் இடங்களுக்குச் செல்வதற்கு வாகனங்களில் திருத்தப்பணியாளர்களை அனுப்பி வைக்க எரிபொருள் இல்லை எனவும் இதனால் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே இயங்குவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.




