அமைச்சு பதவிகளை ஏற்காமல் ரணில் அரசாங்கத்தை ஆதரிப்போம்: சுயேச்சை அணியின் முடிவை அறிவித்தார் கம்மன்பில!

Date:

பாராளுமன்றத்தில் உள்ள 10 சுயேச்சை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமைச்சர் பதவிகளை ஏற்காமல் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவதற்கு தீர்மானம் எடுத்துள்ளனர்.

இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, புதிய வரவு செலவுத்திட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்ததாக தெரிவித்தார்.

கட்சி சார்பற்ற அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஆதரவை வழங்குமாறு பிரதமர் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மே மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தது சுயேச்சை எம்.பி.க்கள் குழுவே என்பதை பிரதமர் விக்ரமசிங்கவிற்கு நினைவுபடுத்தியதாக உதய கம்மன்பில கூறினார்.

பாராளுமன்றத்தில் 15 குழுக்கள் நிறுவப்படவுள்ள அதேவேளை, கட்சித் தலைவர்களைக் கொண்ட தேசிய சபையொன்றை அமைக்க பிரதமர் உத்தேசித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆட்சியில் ஈடுபடுத்தும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டுள்ளதாகவும், அமைச்சர் பதவிகளை ஏற்க விரும்பாத கட்சிகளின் தலைவர்களுக்கு 5 முதன்மை மற்றும் 10 தொழில்நுட்ப குழுக்களின் தலைமைத்துவம் வழங்கப்படும் என்றும் உதயகம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சர் பதவிகளை ஏற்காமல் தமது ஆதரவை வழங்குவதாகவும், நாட்டை மீளக் கட்டியெழுப்ப பாடுபடுவதாகவும் சுயேச்சை எம்.பி.க்கள் பிரதமரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த உதயகம்மன்பில, நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும், டிசம்பர் வரையிலான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் முன்மொழிவதாகவும் பிரதமர்  தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், திருத்தம் தொடர்பில் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட வரைபு குறித்து கலந்துரையாடுவதற்கு பிரதமர் இணங்கியுள்ளதாகவும்  தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...

போதைப்பொருளுடன் பெண் கைது!

புத்தளம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பாலாவி பகுதியில் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்