தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (15) மாலை நடைபெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் குறித்து கலந்துரையாடி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி முடிவை தீர்மானிக்க இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணைய வழியாக மாலை 3 மணிக்கு கூட்டம் இடம்பெறும். தலைவர்கள், செயலாளர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்வதென முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும், எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததையடுத்து, கட்சிகள் சார்பில் மற்றொருவரும் இணைந்து கொள்ளலாமென தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டமும் இன்று நடைபெறும்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1