மன்னார் எரிபொருள் நிலையத்தில் பதற்றம்

Date:

இலங்கை முழுவதும் இன்று வியாழக்கிழமை(12) மதியம் 2 மணி தொடக்கம் நாளை வெள்ளிக்கிழமை(13) காலை 6 மணி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்கு திடீர் என மக்கள் கூடியமையால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இன்று (12) மாலை ஊரடங்கு காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு என எரிபொருள் விநியோகம் இடம் பெற்ற நிலையில் காலை முழுவதும் காத்திருந்து எரிபொருள் கிடைக்காதவர்கள் மாலை நேரம் எரிபொருள் பெற முயன்ற நிலையில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

சாதாரண நேரங்களில் எரிபொருள் நிரப்ப சென்றால் எரிபொருள் இல்லை இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவிப்பதாகவும் நள்ளிரவு நேரங்களில் சில தனியார்களுக்கு அதிக விலையிலும் அதிக அளவிலும் எரிபொருட்களை வழங்குவதாகவும் கூறி மக்கள் முரண்பட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார் பொது மக்களுடன் கலந்துரையாடி மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்த நிலையில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த அனைவரும் கலைந்து சென்றனர்.

இன்று வியாழக்கிழமை(12) மாலை 2 மணியுடன் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

எனினும் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சிலருக்கு இன்று மாலை அவசர நிலையை கருத்தில் கொண்டு வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கப்பட்டது.

எனினும் உள்ளூரை சேர்ந்த சிலர் மாலை 6 மணிக்கு பின் குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு வந்து எரி பொருளை கேட்ட போது அவர்களுக்கு வழங்காத நிலையில் சிலர் இணைந்து தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் அறிய முடிகின்றது.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்