பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

Date:

புதிய பிரதமரின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற விசேட நிர்வாக அதிகாரி சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

2015-2019 நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மூன்று தடவைகள் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.ஏகநாயக்க, இந்த வருடம் நான்காவது முறையாக பிரதமரின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

ஏக்கநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளிலும் மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் லண்டனில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்திலும் 30 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

2026 உயர்தர பரீட்சைக்கு அடையாள அட்டை கட்டாயம்!

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள...

60 வயது கள்ளக்காதலியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்!

அலதெனியவின் யதிஹலகல பகுதியில் உள்ள தனது சட்டப்பூர்வ மனைவிக்குச் சொந்தமான வீட்டில்,...

பொன்.சிவகுமார் நினைவு ஏற்பாடு: வலி.கிழக்கு தவிசாளரிடம் பொலிசார் விசாரணை!

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்