மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை, மட்டக்களப்பில் நேற்று (08) முன்னெடுத்திருந்தனர்.
செங்கலடி சந்திவரை பேரணியாகச் சென்று அங்கு “கோட்டா கோ ஹோம் கம” போராட்ட பந்தலையும் அமைத்துள்ளனர்.
“அரசாங்கத்தை விரட்டியடிப்போம்” எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், உணவு இல்லை, பால்மா இல்லை, எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை, கொள்ளைக்கார பொருளாதார முறைமைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம், மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கொடு, அடிக்காதே! அடிக்காதே!, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த பௌத்த தேரர்களில் பலரும், தமிழ் மொழில் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
செங்கலடியில் அமைக்கப்பட்ட கோட்டா கோ கமவில் இரவில் தீப்பந்தமும் ஏந்தி போராட்டம் நடந்தது.

-செங்கலடி நிருபர்-.




